நெல்லையில் ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது: வாகனம் பறிமுதல்

நெல்லையில் ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது: வாகனம் பறிமுதல்
X
பாளையங்கோட்டையில் டாடா சுமோவில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி, வாகனம் பறிமுதல். இது தொடர்பாக இருவர் கைது.

தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சிக்கிய 1 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனம் பறிமுதல். இது தொடர்பாக இருவர் கைது.

திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் காசிப்பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் 06-09-2021 ம் தேதியன்று, பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக டாடா சுமோ வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்த விசாரணையில் கக்கன் நகரை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரதீஸ்குமார் ஆகிய இருவரையும் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிந்தது. உடனடியாக இது குறித்து திருநெல்வேலி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரரிடம் தகவல் அளித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடத்தலுக்குக்கு பயன்படுத்திய டாடா சுமோ மற்றும் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!