நெல்லை: கல்லூரி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

நெல்லை: கல்லூரி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
X

இணையம் வழியே, மாணவ- மாணவிகளுக்கு ஆளுமைத் தூண்டல் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

நெல்லை சதக்கத்துல்லாஹ் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

நெல்லை பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதலாமாண்டு இளங்களை அறிவியல் மற்றும் முதுகலை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ஆளுமைத் தூண்டல் புத்தாக்கப் பயிற்சி முகாம், கடந்த 8ஆம் தேதி முதல், 15ஆம் தேதி வரை, இணைய வழியாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் மு. முகம்மது சாதிக் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் கலைப்புல முதன்மையர் முனைவர். எஸ். முகம்மது ஹனீஃப் நிகழ்ச்சிக்கான கருத்துருவாக்கமும், கல்லூரியின் வருகைப்பதிவு முறைகள் குறித்து கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சாகுல் ஹமீது, கல்லூரித் தேர்வுகள் குறித்து தேர்வாணையர் முனைவர் சே.மு அப்துல் காதர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் தேர்வாணையார் முனைவர். நாராயணன் மாணவர்களுக்கு ஊக்க உரை வழங்கினார். அரசு உதவி பெறா பிரிவுகளின் துணை முதல்வர் முனைவர். செய்யது முகம்மது காஜா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரிக்கும், பள்ளிக்கும் இடையேயான வேறுபாடு, மாணவ- மாணவிகள் மனநலம், உடல் நலம், ஒழுக்க நெறிகள் குறித்துப் பேராசிரியப் பெருமக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து மலரும் நினைவுகள் மற்றும் ஊக்க உரை அளித்தார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜாகிர் உசைன், முனைவர். சாதிக் அலி, முனைவர். மனோகர், செல்வி. பிரியதர்ஷினி மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தார்கள். நிகழ்ச்சியை பேராசிரியர் சுப்ரியா தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!