/* */

நெல்லை:மின்வாரியம் தனியார் மயமாக்களை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு மின்சார வாரியம் தனியார் மயமாக்களை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

நெல்லை:மின்வாரியம் தனியார் மயமாக்களை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

மின்வாரியம் தனியார்மயமாக்கலை கண்டித்து நெல்லையில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா 2021 ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார வாரியங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அப்போது அவர்கள் மின் வாரியத்தை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், கூட்டமைப்பு தலைவர் பெருமாள்சாமி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்: 2014ஆம் ஆண்டிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக மின்சார சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மின்சார சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சாதாரண மக்களுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான இணை மானியம் கிடைக்காது என்று கூறினார்.

Updated On: 19 July 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  3. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  10. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!