நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்

இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்சை தொடங்கப்பட்டது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்24.08.2023 (வியாழக்கிழமை)

விவசாயிகள், விளைநிலத்தில் விளையும் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய 1999 ஆம் ஆண்டு தொடங்கிய உழவர் சந்தைகள் தற்போது வரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

இதன் மூலம் கடந்த காலத்தில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் காய்கறிகளை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செயவதும், காய்கறிகள் ஏழை மக்களுக்கு எட்டா உணவாக இருந்த நிலையும் மாறியது.

மேலும், உழவர் சந்தை திட்டம். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில், தொடங்கப்பட்டது. வேளாண்மைத் துறையின் கீழ் நடத்தப்படும் உழவர் சந்தையில் தோட்டக் கலைத்துறையினர் சான்றிதழ் அளித்த பிறகு, விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் விலைகளை அனுசரித்து ஒவ்வொரு நாளும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வியாபாரம் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் விலைகளை அனுசரித்து ஒவ்வொரு நாளும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1.தக்காளி-30

2.கத்தரிக்காய்-வெள்ளை-20,கீரிபச்சை-20,வைலட்-18

3.வெண்டை-20

4.புடலை-20

5.சுரை-22,20

6.பீர்க்கு-30

7.பூசணி-16

8.தடியங்காய்-14

9.அவரை-46

10.கொத்தவரை-20

11.பாகல்-பெரியது-25,சிறியது-ஸ்டார்-30

12.பச்சைமிளகாய்-38

13.முருங்கை-24

14.பெரியவெங்காயம்-34,32,30

15.சின்னவெங்காயம்-50,45,40

16.காராமணி-24

17.கோவக்காய்-28

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-25,20,18

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-50

26.மல்லி இலை-30

27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10,சாலட்-25, நைஸ்குக்கும்பர்-45

28.இஞ்சி-பழையது-260,புதியது-110

29.மாங்காய்-நாடு-75,(கல்லாமை-135)

30.ரிங்பீன்ஸ்-70

31.முள்ளங்கி-20,18

32.சீனிக்கிழங்கு-20

33.உருளைக்கிழங்கு-26

34.கேரட்-56

35.சௌசௌ-24

36.முட்டைகோஸ்-28

37.பீட்ரூட்-கம்பம்/உடுமலை-28

38.காலிபிளவர்-32

39.குடமிளகாய்-50

40.பஜ்ஜிமிளகாய்-60

41.பூண்டு-நாடு-150,170,180,200,கொடைக்கானல் மலைப் பூண்டு-270,இமாச்சல் பூண்டு-210,220

42.கருணைக்கிழங்கு-75,70,65

43.சேம்பு-30,40,50

44.சேனைக்கிழங்கு-52

45.நார்த்தை-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-90,85,ஏலக்கி-70,மட்டி-70,நேந்திரன்-65,60,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-50

2.எலுமிச்சை-60

3.ஆப்பிள்-200,160

4.அன்னாசி-50

5.மாதுளை-140,120,100

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-35,30

9.நெல்லிக்காய்-40,35

10.திராட்சை-120

11.சாத்துக்குடி-65,60

12.மாம்பழம்-120,100,90

13.கிர்ணிபழம்-50

14.தர்பூசணி(கிரன்)-30

15.பேரி-70,(வால் பேரி-100)

16.பேரீச்சை-160

17.சீதாபழம்-70

பாளையங்கோட்டை. மகாராஜ நகர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு