நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பைல் படம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 11.04.2023 (செவ்வாய்க்கிழமை) விவரம்.
1.தக்காளி-17 2.கத்தரி-வெள்ளை-60,கீரிபச்சை-40,கீரிவைலட்கத்தரி-35
3.வெண்டை-20
4.புடலை-28
5.சுரை-12
6.பீர்க்கு-30
7.பூசணி-12
8.தடியங்காய்-18 9.அவரை-நாடு-60 10.கொத்தவரை-24 11.பாகல்-சிறியது-40,35,பெரியது-35
12.பச்சைமிளகாய்-46 13.முருங்கை-18
14.பெரியவெங்காயம்-18,16
15.சின்னவெங்காயம்-44,40,38 16.காராமணி-28
17.கோவக்காய்-16
18.தேங்காய்-31,30
19.வாழைக்காய்-30
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-40
25.புதினா-40
26.மல்லி இலை-75
27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-10,நாடு-10,சாலட்-20,நைஸ்-35,30 28.இஞ்சி-120 29.மாங்காய்-நாடு-25,பெங்களூரா-30 30.நார்த்தங்காய்-26 31.ரிங்பீன்ஸ்-96
32.முள்ளங்கி-16 33.சீனிக்கிழங்கு-20 34.உருளைக்கிழங்கு-ஆக்ரா/கோலார்-18
35.கேரட்-ஊட்டி-45 36.சௌசௌ-28 37.முட்டைகோஸ்-12 38.பீட்ரூட்-18
39.காலிபிளவர்-30
40.குடமிளகாய்-60
41.பஜ்ஜிமிளகாய்-90 42.பூண்டு-சீடு-120,110,100,நாடு-100,90 43.கருணைக்கிழங்கு-40 44.சேம்பு-நாடு-54,பால் சேம்பு-80 45.சேனைக்கிழங்கு-48 46.பச்சைபட்டாணி-60
47.சிறுகிழங்கு-45,40
48.பட்டர்பீன்ஸ்-130
49.சோயாபீன்ஸ்-90
பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை-70,60,ஏலக்கி-70,மட்டி-70,60,நேந்திரன்-50,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-50,பச்சை-40
2.எலுமிச்சை-70 3.ஆப்பிள்-160,180,200
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-180,160,140
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-40,35
10.திராட்சை-120,100,80 11.தர்பூசணி-20,15 12.ஆரஞ்சு-(மால்டா) ஆரஞ்சு-100 13.கிர்ணி-40
இந்தத்தகவலை பாளையங்கோட்டை. மகாராஜ நகர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.
சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் உழவர் சந்தைகள்
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவராகவும் இருந்த மு.கருணாநிதியால் தொடங்கப்பட்டது உழவர் சந்தை திட்டம். சந்தைகளில் காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகள் எட்டாக் கனியாக இருந்து வந்தது. இடைத்தரகர்கள் இன்றி தங்களது விளைப் பொருள்களை விவசாயிகள் நேரடியாக பொது மக்களிடம் விற்று பயன் பெறுவதகாக, 1999-ம் ஆண்டு மதுரையில் முதல் உழவர் சந்தை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் பராமரிப்பின்றி காணப்படும் உழவர் சந்தைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் புதிதாக 120 உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும் தமிழக வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மற்ற காய்கறி கடைகளின் விலையை விட, உழவர் சந்தையில் விலை குறைவாக விற்கப்பட்டதால், பெரும்பாலானோர் உழவர் சந்தைகளை நாட் தொடங்கியதால் நல்ல வரவேற்பை பெற்ற திட்டமாக உருவெடுத்து, தற்போது வரை செயல்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் சுமார் 180 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் நலத்திட்டமான உழவர் சந்தைகள் கடந்த ஆட்சி காலங்களில் பராமரிப்பின்றி காணப்பட்டது. தற்போது, அவற்றை புனரமைக்கவும், தமிழகத்தில் மேலும், 120 உழவர் சந்தைகளை ஏற்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu