/* */

பிரம்மா குமாரிகள் சார்பில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் பிரம்மா குமாரிகளின் அமைதி ஊர்வலம்.

HIGHLIGHTS

பிரம்மா குமாரிகள் சார்பில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
X

நெல்லையில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில்  நடைபெற்ற புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு அமைதி பேரணி.

நெல்லையில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு அமைதி பேரணி நடைபெற்றது.

புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று திருநெல்வேலி பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் பிரம்மா குமாரிகளின் அமைதி ஊர்வலம் பாளையங்கோட்டை காவல் நிலையம் முன்பு தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மது,புகை பழக்கத்தினால் விளையும் தீமைகள் எவை, ராஜயோக தியானத்தின் மூலம் தீய பழக்கங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது எப்படி? என்பது பற்றி பிரம்மா குமாரிகள் சேவை ஒருங்கிணைப்பாளர் கெடன் சிவபாலன் விளக்கம் அளித்தார்.

திருநெல்வேலி பிரம்மா குமாரிகள் அமைப்பின் பொறுப்பாளர் புவனேஸ்வரி, திருநெல்வேலி மாநகரகாவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார், திருநெல்வேலி சர்வசமய கூட்டமைப்பின் தலைவர் சிதம்பரம், செயலாளர் முனைவர்.கோ. கணபதி சுப்பிரமணியன், துணைச் செயலாளர் கவிஞர்.சு.முத்துசாமி அனைவரும் சேர்ந்து புகையிலை ஒழிப்பு கண்காட்சி வாகனத்தையும் அமைதி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

இந்த புகையிலை ஒழிப்பு படவிளக்க கண்காட்சி வாகனம் இன்று நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளிலும், நாளை திங்கள்கிழமை அம்பாசமுத்திரம் சுற்றியுள்ள பகுதிகளிலும், மே 31 செவ்வாய்க்கிழமை தென்காசி சுற்றியுள்ள பகுதிகளிலும் பொது மக்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த பிரம்மா குமாரிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது. அப்போது புகையிலை தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

Updated On: 29 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!