நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக செந்தாமரைக்கண்ணன் பொறுப்பேற்றார்

நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக செந்தாமரைக்கண்ணன் பொறுப்பேற்றார்
X

நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக செந்தாமரைக்கண்ணன்

நெல்லையில் கடைகள், வீடுகளில் சிசிடிவி கேமரா மூலம் குற்றங்களை குறைக்க முடியும். புதிதாக பொறுப்பேற்ற மாநகர ஆணையாளர் தகவல்.

நெல்லையில் கடைகள் மற்றும் வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியும். புதிதாக பொறுப்பேற்ற மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் புதிதாக பதவியேற்றுள்ள மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:- தற்போது உள்ள கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அரசின் அறிவுரைப்படி எடுக்கப்படும்.

முறையான ஆவணங்கள் இன்றி பொது மக்களுக்கு கடன் கொடுத்து வசூலிப்பவர்கள், மைக்ரோ பைனான்ஸ் நடத்தும் நிறுவனங்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாநகரில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதிகளவில் சிசிடிவி கடைகள் மற்றும் வீடுகளுக்கு முன் பொருத்தும் போது குற்றங்களை கண்டறிவதற்கும், குற்றங்கள் குறைவதற்கு அது வாய்ப்பாக அமைகிறது.

எனவே வரும் காலங்களில் சிசிடிவி எண்ணிக்கைகளை அதிகரிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அதேநேரம் மக்களும் தங்கள் வீடுகள் மற்றும் கடைகள் முன்பாக சிசிடிவி பொருத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். .

Tags

Next Story