/* */

நெல்லை-பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

நெல்லை-பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது பெட்ரோல் 97.57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று நெல்லையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பல்க் முன்பு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர பாண்டியன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸார் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்தும, இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்தும் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய மோடி அரசு கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனே கட்டுப்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jun 2021 6:17 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?