முதுநிலை மருத்துவ மாணவர்களின் பயிற்சி காலத்தை ஓராண்டு நீடிக்க எதிர்ப்பு.

முதுநிலை மருத்துவ மாணவர்களின் பயிற்சி காலத்தை ஓராண்டு நீடிக்க எதிர்ப்பு.
X
முதுநிலை மருத்துவ மாணவர்களின் பயிற்சி காலத்தை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை அரசு மருத்துவமனையில் போராட்டம்.

பயிற்சி காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பணி நியமணம் செய்யவும் வலியுறுத்தல்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் பயிற்சி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அரசாணை பிறப்பிக்கபட்டுள்ளது.

அதாவது கடந்த ஆண்டு முழுவதும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கொரனோ சிகிச்சை பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்களுக்கு பிற சிகிச்சைகள் குறித்து அனுபவம் கிடைத்திருக்காது என்ற அடிப்படையில், அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அரசின் இந்த முடிவுக்கு பயிற்சி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே பயிற்சிக் காலத்தை நீட்டிக்க கூடாது என்றும் உடனடியாக தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுதும் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முதல் நிலை பயிற்சி மருத்துவ மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட இன்று மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பு அமைதியாக கூடிநின்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அப்போது அவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.



Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்