மேலப்பாளையம் - ஸ்டெர்லைட்ஆலை துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ஸ்டெர்லைட்ஆலை துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டுமென்று போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது.இரண்டு பெண்கள் உட்பட 15 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்தனர்.
அந்த சம்பவத்தின் 3 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது.இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அப்துல் ஜப்பார் தலைமை தாங்கினார் தொல்லியல் ஆய்வாளர் சங்கரநாராயணன், முன்னிலை வகித்தார்.
இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அ.பீட்டர், மதிமுக விஜயகுமார் பாக்கியம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேரின்பராஜ்,முஸ்லிம் லீக் அப்துல் அஜீஸ் மற்றும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் ஜோசப், பாதுஷா, ஷாபிக், ஐசக்,அஜிஸ், சேக் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு மொழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நினைவேந்தல் நிகழ்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
1.சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும்.
2. நீதிபதி ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும்
3.ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற்றது போல,
கூடங்குளம் அணுஉலை போராட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu