/* */

அரசு அருங்காட்சியகம்-பயனற்ற பொருட்களில் இருந்து கலைபொருட்கள் செய்யும் பயிற்சி.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பயனற்ற பொருட்களில் இருந்து கலை பொருள் தயாரிக்கும் இணையவழி பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரசு அருங்காட்சியகம்-பயனற்ற பொருட்களில் இருந்து கலைபொருட்கள் செய்யும்  பயிற்சி.
X

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து இணையவழி கைவினைப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசு உத்தரவின்படி அரசு அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மாணவ மாணவிகள் வீட்டிலிருந்தே பயன்தரும் வகையில் அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இணைய வழியில் பல்வேறு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடைபெற்ற பயிற்சியில் வீணான பொருள்களில் இருந்து கலைப் பொருள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியினை மாவட்டக் காப்பாட்சியர் சத்தியவள்ளி துவங்கி வைத்தார்.சிவராம் கலைக்கூடத்தின் ஓவியப்பயிற்சி ஆசிரியர் கோவிந்தராஜ் நடத்தினார்.

அதில் பழைய அட்டை மற்றும் A4 பேப்பர் கொண்டு அழகிய போட்டோ பிரேம் தயாரித்தல் மற்றும் காய்கறி கழிவுகள் கொண்டு அதை அலங்கரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவ்ட்டங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.NPNK கலை பண்பாடு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா. நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார்.

Updated On: 27 May 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ஆதரவற்ற மாணவர்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் அகாடமி
  2. நாமக்கல்
    வெண்ணந்தூர் பகுதியில் கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா
  3. கரூர்
    கரூர் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்கள் 24ம் தேதி...
  4. ஈரோடு
    நாப்கின்களை கொண்டு மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படத்தை உருவாக்கி...
  5. திருவெறும்பூர்
    குவைத் தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில்...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் வேலைக்கு செல்லும் மகளிருக்கு விடுதி அமைக்க இடம் தேர்வு
  7. அரசியல்
    ‘நான் செத்துட்டேன்’ லால்குடி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன் திடீர்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்துக்கு நூற்றாண்டு...
  9. திருவள்ளூர்
    பெரியபாளையம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன்...