திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவில் திருவாசகம் முற்றோதுதல்

திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவில் திருவாசகம் முற்றோதுதல்
X

திருவாசகம் முற்றோதுதல் விழா

திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாநாில் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது அருள்தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு திரிபுராந்தீசுவரர் திருக்கோயில். பழமையும், பெருமையும் கொண்ட திருக்கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.

இந்த கோவிலில் நடைபெறுகின்ற விழாக்களில் சித்திரை திருவிழா சிறப்பு பெற்றதாகும். இதற்கான கொடியேற்றம் கடந்த 8 ம் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி- அம்பாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது.

6-ம் திருவிழாவில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்கள் மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் திருமுறைபாடியவாறு ரத வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் இறுதி நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இன்று இரவு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களால் தடைபட்ட தெப்ப உற்சவ திருவிழா சுமாா் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தெப்பக்குளம் அருகில் நடைபெற்றது.

திருவாசக சித்தர் திருக்கழுக்குன்றம் சிவ தாமோதரன் தலைமையில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதுதல் விழாவில் சிவனடியார்கள் அனைவரும் இணைந்து திருவாசகப் பாடல்களை பாடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture