தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை: மத்திய அமைச்சர் வி. கே. சிங் பேச்சு
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
மத்திய சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து துறை இணை அமைச்சரும், நெல்லை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான வி.கே.சிங் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்தார். இங்கு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பாஜக அரசின் 8 ஆண்டுகால ஆட்சியில் ஜாதி, மதம், இனம் கடந்து பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது, யாரையும் புறக்கணிக்கவில்லை. நாடு முழுவதும் உஜ்வால திட்டத்தின் கீழ் 8 கோடி பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்சக்தி அபியான் திட்டத்தில் கிராமப் பகுதிகளில் வீடுகளுக்கு குடிதண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி பாகுபாடின்றி அனைத்து மாநிலங்களுக் கும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் உலக அளவில் இந்தியா தனித்துவம் பெற்று விளங்குகிறது.
பெண்களின் முன்னேற்றம் இந்த 8 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. நம்மிடம் இருந்து கொரோனா தடுப்பு ஊசி பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குடும்ப ஆட்சி போல் இல்லாமல் மோடி மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார். சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது, இது தற்காலிக விலை உயர்வு தான். டோல்கேட்டுகள் எண்ணிக்கையை குறைக்க பல சட்ட சிக்கல்கள் உள்ளது, இதற்கு தீர்வு காணப்பட்டு டோல்கேட் எண்ணிக்கை குறைக்க வாய்ப்பு உள்ளது . தமிழகத்தில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டது தான், ஆகையால் இனி தமிழகத்தை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை எனவும் அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பேட்டியின் போது சட்டமன்ற நயினார்நாகேந்திரன், மாவட்ட தலைவர் தயாசங்கர், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu