மருத்துவமனையில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்

மருத்துவமனையில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்
X
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.

நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனம் விற்பது தொடர்பாக இளைஞர் ஒருவரை கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பாளையங்கோட்டை மனக்காவளம் பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்த உதேஸ் ராஜ் (19) உட்பட 4 பேரை கடந்த 2 தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.


அப்போது உதேஸ்ராஜ் நீதிபதியிடம் தனக்கு நெஞ்சு வலிப்பது போன்று உள்ளதாக தெரிவிக்கவே இவரைத் தவிர மற்றவர்களை சிறையில் அடைக்கவும் உதேஸ் ராஜ்க்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதேஸ் ராஜ்க்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை மருத்துவமனை வளாகத்தில் இருந்து உதேஸ்ராஜ் தப்பிச் சென்றுள்ளார். இது சம்பந்தமாக பாதுகாப்பில் இருந்த போலீசார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் அளித்த தகவல்படி ஹைகிரவுண்ட் போலீசார் கைதி தப்பியோடிய சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் நெல்லை மாநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நெல்லை மாநகர பகுதி முழுவதும் போலீசார் கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!