வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் அமைக்கும் பணி: எம்எல்ஏ., அப்துல் வகாப் ஆய்வு
ஜவஹர் மைதானத்தில் தற்காலிக கடைகள் கட்டும் பணிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் மற்றும் அதிகாரிகள்.
நெல்லை பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்ளிட்ட 540 கடைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தொற்று காரணமாக இந்த மார்க்கெட் பழைய போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்துவிட்டு அந்த இடத்தில் அடுக்குமாடி வளாகம் நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளது. இதற்காக பாளையங்கோட்டை மார்க்கெட் வளாகம் முழுவதும் இடித்து அப்புறப்படுத்த படவுள்ளது.
இதையடுத்து வியாபாரிகள் பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் தற்போது இயங்கி வரும் பழைய போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் கடைகளை ஒதுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதையடுத்து ஜவஹர் மைதானத்தில் தற்காலிக கடைகள் கட்டும் பணிகள் துவங்கிய நிலையில் இப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், பாளையங்கோட்டை மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாட்சா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மார்க்கெட் வியாபாரிகள், கடைகள் அனைத்தையும் 2 அடி உயரத்துடன் அமைக்க வேண்டும். வாரிசுதாரர்கள், பங்குதாரர்களுக்கு கடைகளை பெயர் மாற்றி கொடுக்க வேண்டும். புதிய கடைகள் கட்டி முடிக்கும்போது தற்போதைய வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu