தாமிரபரணி நீரை தூய்மைப்படுத்துவதே இலக்கு: நெல்லை கலெக்டர் விஷ்ணு உறுதி

தாமிரபரணி நீரை தூய்மைப்படுத்துவதே இலக்கு: நெல்லை கலெக்டர் விஷ்ணு உறுதி
X

தாமிரபரணி நீர்நிலைகள் தூய்மைப் பணி மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்ட மூவருக்கு சக்தி விருதுகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

தாமிரபரணி நீர்நிலைகள் தூய்மைப் பணி மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்ட மூவருக்கு சக்தி விருதுகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

தாமிரபரணி நீர்நிலைகள் தூய்மைப் பணி மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்ட மூவருக்கு சக்தி விருதுகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்வராக பணியாற்றியவர் சக்திநாதன். நீர்நிலைகள் பாதுகாவலரான அவர் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பில் காலமானார். இன்று மே 10ம் தேதி அவரது நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலியில் தாமிரபரணி மற்றும் நீர் நிலைகளை பாதுகாத்து சுத்தப்படுத்திய சமூக ஆர்வலர்கள் மூவருக்கு அவரது பெயரிலான சக்தி விருது மற்றும் ரொக்கப்பரிசு மற்றும் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி கரையில் மரம் நடும் நிகழ்வு நடந்தது.

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார். பின்னர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஆற்றில் பரிகாரம் என்ற பெயரில் உடுத்தியிருக்கும் துணி மணிகளை ஆற்றில் விடும் பழக்கம் உள்ளது. இதனால் தாமிரபரணி நதி எங்கும் பழைய, கிழிந்த அழுக்கு துணிகள் நிரம்பி வழிகின்றன. இதனை பாபநாசம் மூர்த்தி என்பவர் தனது சொந்த செலவில் சொந்த முயற்சியில் சுத்தப்படுத்தி வருகிறார். இதேபோல் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த லூர்துராஜ் என்பவரும் தாமிரபரணி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலி மாவட்டம் மானூர் பெரியகுளம் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர் அந்த பெரிய குளத்தை பராமரித்து விவசாயத்தை பெருக்கியுள்ளனர். இந்த மூவரையும் பாராட்டி கலெக்டர் விஷ்ணு விருது அளித்து, தலா ரூபாய் 5000 பரிசினையும் வழங்கினார். தொடர்ந்து தாமிரபரணியை பாதுகாப்போம் உறுதிமொழி மேற்கொண்டனர்.

நிகழ்வில் கலெக்டர் விஷ்ணு பேசுகையில்:- எந்த ஒரு மாவட்டத்திலும் பொதுமக்களின் பங்களிப்போடு தான் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி மற்றும் 200க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை சுத்தப்படுத்தி பாதுகாக்கும் பணியில் நான்கரை லட்சம் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் பாபநாசம் துவங்கி மருதூர் அணைக்கட்டு வரையிலும் தாமிரபரணியை வரும் அக்டோபர் மாதத்திற்கு முன்பாக தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் மனிதக் கழிவுகள் இனி தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படுவது முழுமையாக நிறுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநகராட்சி பகுதியிலும் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்திய பிறகு சாக்கடைகள் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலப்பதை தடுக்க முழுமையான திட்டம் செயல்படுத்தப்படும். வண்ணார் துறைகளில் இருந்து வெளியேறும் நீரை நேரடியாக ஆற்றில் விடுவது தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தாமிரபரணி நதி நீரில் குளிக்கலாம் என்ற நிலையை மாற்றி நீரை நேரடியாக குடிக்கலாம் என்ற மேம்பட்ட நிலைக்கு உயர்த்துவதே நமது அடுத்த கட்ட பணியாகும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!