சிகிச்சை பெற்றுவரும் காவல் உதவி ஆய்வாளரை டிஜிபி, அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்
சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளரை தமிழக டிஜிபி மற்றும் அமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிதி ரூபாய் 5 லட்சம் வழங்கினார்கள்.
நெல்லை மாவட்டம், சுத்தமல்லியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா நேற்று ஆறுமுகம் என்பவரால் கத்தியால் கழுத்தில் குத்தி படுகாயமடைந்த இவர் தற்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள 5 லட்சம் நிவாரண நிதியை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து நிருபருக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழக முதலமைச்சர் உத்தரவு நிவாரண நிதி 5 லட்சம் ரூபாய் வழங்கினேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த பாதிப்பும் இல்லை. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், உடனடியாக பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்க்கு 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் சாதுரியமாக நடந்த காவலர்கள் லட்சுமி, ரமேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தற்போது குறைந்துள்ளது. தென்மாவட்டங்களில் பழிக்குப்பழி சம்பவமும் குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு அதிகமாக வந்துள்ளது. இருந்தாலும் நாங்கள் நாள்தோறும் குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம்.
குழந்தைகள் மீதான குற்றங்கள் தொடர்பாக குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல் உதவி செயலி மூலமாக 66 விதமான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சைபர் குற்றங்கள் தொடர்பான தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக காவலர்களுக்கு மனநல பயிற்சி அளிப்பதற்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லக்கூடிய காவலுக்கு தேவைப்பட்டால் துப்பாக்கியை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu