முதியோர் இல்லத்துக்கு காய்கறி பழங்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியது

முதியோர் இல்லத்துக்கு காய்கறி பழங்களை   மாநகராட்சி நிர்வாகம் வழங்கியது
X

 சோயா டிரஸ்ட் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு பொருட்கள் வழங்கிய போது.

நெல்லை மாநகராட்சி நுண் உரம் செயலாக்க மையத்தில் விளைவித்த காய்கறி, பழங்கள் முதியோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது.

நெல்லை மாநகராட்சி நுண் உரம் செயலாக்க மையத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மாநகராட்சி ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி பாளையங்கோட்டை வேலவர் காலனியில் உள்ள நுண் உரம் செயலாக்க மையத்தில் தூய்மை பணியாளர்களால் இயற்கை உரம் மூலம் விளைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் நாட்டுக்கோழி முட்டை ஆகியவை மாநகர நல அலுவலர் டாக்டர் .சரோஜா மற்றும் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் சோயா டிரஸ்ட்டில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு வழங்கினர்.

Tags

Next Story