பாளையங்கோட்டையில் நூல்கள் வெளியீட்டு விழா: கனிமொழி எம்பி., பங்கேற்பு
பாளையங்கோட்டையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் எம்.பி., கனிமொழி.
பாளையங்கோட்டையில் ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி எழுதிய 'மாண்புமிகு வேண்டுகோள் கடிதங்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாராளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் பெற்றுக்கொண்டார்.
இதில் பேசிய கடிமொழி எம்.பி, மாண்புமிகுகளுக்கு கடிதம் எழுதுவது என்பது மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்கள் வைக்கும் கோரிக்கை என்பது இயல்பானது தான். ஆனால் புத்தகத்தை எழுதி இருக்கிற மணி அவர்கள் புதிய ஆட்சி வந்த பின்பு அங்கே இருக்கும் முதல்வருக்கு, அமைச்சர்களுக்கு , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சில கோரிக்கைகளை ஆலோசனைகளை புத்தக வடிவமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
இது புதிய முயற்சியாகும், திமுக வை விமர்சித்து பேசியவர்கள் எல்லாம் இன்று திமுகவை ஆதரிக்க தொடங்கியுள்ளனர். திமுகவை ஆதரித்தால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு எது நல்லது செய்யுமோ, மக்களை எது பாதுகாக்குமோ அதனை ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களுக்கு மழை காலத்தில் , எப்படி மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் எப்படி நிவாரணம் வழங்கப்படுகிறதோ அதுபோன்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மணி வைத்துள்ளார். அவருக்கு மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன், முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் இதற்கு உறுதி அளித்து அதனை நிறைவேற்றியும் தந்துள்ளார். மேலும் மணி அவர்கள் ஒவ்வொரு துறைக்கும் ஏராளமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அது மிக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இங்கு பேசியவர்கள் அரசியல் எனது இடத்திற்கு இடையூறாக வந்து விட்டதாக கூறினார்கள். மறுபடியும் நிச்சயமாக எழுதுவேன் என்ற உறுதியை தருகிறேன் என தெரிவித்தார்.
முன்னதாக கவிஞர் கலாப் பிரியாவின் மகள் மருத்துவர் அகிலாண்டபாரதியின் 'கொஞ்சம் மருத்துவம் கொஞ்சம் மனிதம்' என்ற நூலையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிகழ்சியில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கவிஞர் துரைபாரதி, கவிஞர் இளையபாரதி , தாவூத்மியாக்கான் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu