பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்
X
காயமடைந்தவர்களை நெல்லை அரசு மருத்துவமனையிலும், சிறையில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித் திரிந்த முத்துமனோ (27), சந்திரசேகர்(22) கண்ணன்(23) மாதவன் (19)ஆகிய 4 பேரிடம் அரிவாள்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று நான்கு பேரும் ஸ்ரீவைகுண்டம் சிறைச்சாலையிலிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க கொண்டு வரப்பட்டனர்.

பாளை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டு கைதிகளுக்கான செல்லுக்கு அனுப்பும் போது சிறையிலிருந்து ஒரு பிரிவைச் சார்ந்த கைதிகள் அந்த நான்கு பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் முத்து மனோ மீது கல்லால் தாக்கியதில் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சந்திரசேகர்(22) கண்ணன்(23) மாதவன் (19) ஆகியோர் மத்திய சிறை வளாகத்திலேயே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . முத்து மனோ மீது களக்காடு முறப்பநாடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால் பாளை மத்திய சிறையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதி முத்து மனோவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!