நெல்லை-அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு இணையவழி பயிற்சி

நெல்லை-அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு இணையவழி பயிற்சி
X
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு இணைய வழி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி இணையவழியில் நடைபெற்றது. அரசு அருங்காட்சியகம் மற்றும் இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் ஏழு நாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி இணையவழியில் நடைபெற்றது.

அருங்காட்சியகமும், அரும்பணிகளும் என்னும் தலைப்பில் முதல் நாள் சிறப்பு உரையில் நாணயங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை பற்றியும், இந்தியாவில் பல்வேறு மன்னர்களின் காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இரண்டாம் நாள் அரசு அருங்காட்சியகவியல் ஓர் அறிமுகம் என்கிற தலைப்பில், இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பற்றியும், அருங்காட்சியகத்தின் நோக்கங்கள், பிரிவுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது..மூன்றாம் நாள் நிகழ்வில் நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தமிழகத்தில் உள்ள மாவட்ட அருங்காட்சியகங்களில் அவற்றின் கல்வி பணிகளும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அவரது உரையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட அருங்காட்சியகங்களில் உள்ள முக்கிய அரும்பொருட்கள் பற்றியும், அவற்றில் நடைபெறும் கல்வி பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். நான்காம் நாள் நிகழ்ச்சியில் அருங்காட்சியகங்களில் எவ்வாறு அரும்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன என்பது பற்றியும், ஐந்தாம் நாள் சிறுவர் அருங்காட்சியகங்கள் பற்றிய விளக்கமும், ஆறாம் நாளன்று அருங்காட்சியக துறை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி விரிவாகவும், இறுதி நாளான இன்று தமிழக வரலாற்றில் ஐம்பொன் சிலைகள் என்கிற தலைப்பில் பல்வேறு மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் முக்கியத்துவம் பற்றியும், அதன் வரலாற்றுப் பின்னணி பற்றியும் விரிவாக கூறப்பட்டன. ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
AI மூலம் புகைப்படங்களில் அதிரடியான மாற்றங்கள் செய்யும் Editing AI Tools!