புத்தகத் திருவிழாவில் தாமிரபரணி நதி ஆவணப்படம்: ஆட்சியர் விஷ்ணு வெளியீடு
பாளையங்கோட்டை வ.உசி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா 6ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆவணப்படத்தை வெளியிட்ட ஆட்சியர் விஷ்ணு. உடன் எழுத்தாளர் சோ. தர்மன்
பாளையங்கோட்டை வ.உசி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா 6ஆம் நாள் நிகழ்ச்சியில் தாமிரபரணி நதியின் ஆவணப்படத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வெளியிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் 5வது நெல்லைப் புத்தகத் திருவிழாவில் 6ஆம் நாள் நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
5வது நெல்லைப் புத்தகத் திருவிழாவில் இன்று கலைபண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளும், எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி எழுதிய "வெஞ்சினம்" மற்றும் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் எழுதிய "வேணுவன மனிதர்கள்" என்ற நூலினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வெளியிட பேராசிரியர் மகாதேவன் பெற்றுக்கொண்டார். மற்றும் கி.ரா.வின் கடைசி நேர்காணல் என்ற நூலினை நூலகத்துறை இயக்குநர் க.இளம்பகவத் வெளியிட நூலகர முத்துகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் நூலகத்துறை இயக்குநர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சத்தியவள்ளி முன்னிலை வகித்தார். ஆசிரியர் சரவணகுமார் வரவேற்புரையாற்றினார். சாகித்ய அகாடமி விருதாளர் சோ.தர்மன், எழுத்தாளர்கள் உமர்பாரூக், கவிஞர் வெய்யில், கார்த்திக் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.மேலும் தாமிரபரணியில் நதியில் அமைந்துள்ள 7 அணைக்கட்டுகள் மற்றும் தாமிரபரணியின் தடங்கள் குறித்த ஆவணப்படத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வெளியிட்டார். தேசிய தகவலியல் மைய அலுவலர் ஆறுமுக நயினார் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu