40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது தளவாய் மாடசாமி கோவில் கொடைவிழா!

40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது தளவாய் மாடசாமி கோவில் கொடைவிழா!
X
Thalavai Madasamy-பொட்டல் ஊரில் அமைந்துள்ள தளவாய் மாடசாமி கோவில் கொடை விழா 40 ஆண்டுகளுக்கு பின்பு சிறப்பாக நடைபெற்றது.

Thalavai Madasamy-தளவாய் மாடசாமி கோவில் கொடை விழா 40 ஆண்டுகளுக்குப் பின்பு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையை அடுத்துள்ள திருவண்ணநாதபுரம் ஊர் பொட்டலில் அமைந்துள்ள தளவாய் மாடசாமி கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இக்கோவிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கொடை விழா நடைபெற்றது இதனைத்தொடர்ந்து தற்போது இன்று நடைபெறும் கோவில் கொடை விழா சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. இக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு காலையில் குடியழைப்புடன் துவங்கி, மதியம் உச்சிகால கொடைவிழா சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் நடந்தது. முன்னதாக சுவாமிக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாக பொங்கலிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture