ரம்ஜான் பண்டிகை மேலப்பாளையம் மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகை மேலப்பாளையம் மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகை
X
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

நெல்லையில் ரம்ஜான் பண்டிகை களை கட்டியது. மேலப்பாளையம் மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திமுக எம்எல்ஏ அப்துல் வகாப், எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் பங்கேற்றனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த ஆண்டும் தொடர் நோன்புக்கு பிறகு இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகரம் முழுவதும் உள்ள மசூதிகளில் ரம்ஜான் பண்டிகை களைகட்டியுள்ளது. ரம்ஜானையொட்டி காலை முதல் ஆங்காங்கே உள்ள மசூதிகளில் நடைபெறும் இஸ்லாமியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மேலப்பாளையம், ரெட்டையார்பட்டி சாலையில் அமைந்துள்ள மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார். அதேபோல் மேலப்பாளையம் குறிச்சி சாலையில் அமைந்துள்ள மசூதியில் நடைபெற்று வரும் சிறப்பு தொழுகையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்வகாப் பங்கேற்றார்.

தொழுகைக்குப் பின்பு ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி இளைஞர்கள், சிறுவர்கள் புத்தாடை அணிந்தபடியும், உறவினர்களை உபசரித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து பண்டிகையின் முக்கிய நோக்கமான ஏழை, எளிய மக்களுக்கு உணவு அளித்தும், உறவினர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டும் நாள் முழுவதும் ரம்ஜானை கொண்டாட உள்ளனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!