/* */

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் சிறப்பு பட்டிமன்றம்

பாளையங்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாழ்வில் வெற்றி அடைய பெரிதும் தேவை அன்பா? அறிவா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது

HIGHLIGHTS

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் சிறப்பு பட்டிமன்றம்
X

நெல்லை புத்தகத்திருவிழாவில் நடந்த சிறப்பு பட்டிமன்றம்

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் வாழ்வில் வெற்றி அடைய பெரிதும் தேவை அன்பா? அறிவா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை கவிஞர் சு. முத்துசாமி பாடினார். தமிழ் அருமை பெருமைகளை கவிஞர் சுப்பையா பாடலாகப் பாடினார். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா பட்டிமன்றத்தை தொடங்கி வைத்தார். நடுவராக முனைவர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியன் செயல்பட்டார். வாழ்வில் வெற்றி அடைய பெரிதும் தேவை அன்பே என்ற அணியில் நாவலர். முனைவர்.இராம. பூதத்தான், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி தமிழ் பேராசிரியை முனைவர்.ஸ்ரீமதி பேச்சாளர். எஸ்.பி.முருகன் ஆகியோரும், அறிவே என்கிற அணியில் தூய இன்னாசியார் கல்வியியல் கல்லூரி பேராசிரியை முனைவர் இந்திரா ராஜாமணி, தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி பேராசிரியர் முனைவர் அந்தோணிராஜ், எழுத்தாளர் மு.வெ.ரா ஆகியோர் வாதிட்டனர். நிறைவாக வாழ்வில் வெற்றியடைய அன்பும் தேவை, அறிவும் தேவை அன்பு இல்லாத அறிவும், அறிவில்லாத அன்பும் பயன்தராது என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

பட்டிமன்ற சிறப்பு பேச்சாளர்களுக்கு கோட்டாச்சித்தலைவர்.இரா.சந்திரசேகர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர்.எஸ்.தம்பான். பட்டிமன்ற பாவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். நிகழ்வில் கவிஞர். புத்தனேரி கோ.செல்லப்பா, முனைவர் முத்துகிருஷ்ணன், கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி தச்சைமணி, உக்கிரன்கோட்டை மணி. கவிஞர் பிரபு,பேரா. ஜெயமேரி, முனைவர் சரவணக்குமார், கவிதாயினி வேதிகா, தொடர் வாசிப்பு சபேசன்,சுரேஸ், சிவ நடராஜ், நூலகர் அகிலன் முத்துகுமார், வைகுண்டமணி, வி.கே.புரம் நடராஜன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக வட்டாட்சியர் செல்வன் நன்றி கூறினார்

Updated On: 26 March 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு