நெல்லையில் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஜூடோ தேர்வு போட்டிகள்

நெல்லையில் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஜூடோ தேர்வு போட்டிகள்
X

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான மனவளர்ச்சி குன்றியோருகக்கான ஜூடோ விளையாடுப் போட்டி.

திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான மன வளர்ச்சி குன்றியோருக்கான ஜூடோ விளையாட்டு போட்டியில் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நெல்லை மாவட்ட ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் திருநெல்வேலி சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மனவளர்ச்சி குன்றியோருகக்கான ஜூடோ விளையாடுப் போட்டி நடைபெற்றது. மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதியான வீரர்களை தேர்வு செய்யும் போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர் கலந்து கொண்டனர்.

வயது மற்றும் எடை அடிப்படையாகக் கொண்டு ஏழு பிரிவுகளில் இந்த விளையாட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 7 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

மேலும் மாநில அளவில் நடைபெறும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றவர்களாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக கலந்துகொண்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கடந்த மாதம் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் பாளையங்கோட்டையில் உள்ள வஉசி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநில அளவிலான தகுதி போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 40க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளித்து சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது