காெராேனா நிதி வாங்க தந்தையை இழந்த மாணவிக்கு எஸ்பி உதவி
கொரோனாவால் தந்தையை இழந்த 6-ம் வகுப்பு மாணவிக்கு ரூ 1 லட்சம் நிதி உதவி பெறுவதற்கு மாவட்ட கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்தார்.
கொரோனாவால் தந்தையை இழந்த 6-ம் வகுப்பு மாணவிக்கு ரூ 1 லட்சம் நிதி உதவி பெறுவதற்கு மாவட்ட கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஹர்ஷினி (வயது 11) உள்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. தினகரன் ஏற்பாட்டில் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கொரோனாவால் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 1 லட்சம் வைப்புத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நெல்லை சிறுமி ஹர்ஷினியை பங்கேற்க மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஏற்பாடுகள் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிறுமி ஹர்ஷினி தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் கோவை சென்று வர ரயில் பயண டிக்கெட்டை தனது சொந்த செலவில் முன்பதிவு செய்து எடுத்து கொடுத்தார். அதன்படி சிறுமி கோவை சென்றதால் அவரது வங்கிக் கணக்கில் ரூ. 1 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று சிறுமி ஹர்ஷினி தனது தாயுடன் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து எஸ்பி மணிவண்ணை நேரில் சந்தித்து தனக்கு செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறுமியிடம் நன்றாக படிக்க வேண்டும். எந்த உதவி என்றாலும் என்னிடம் கேளுங்கள். உங்களுக்கு செய்து தருகிறேன் என சிறுமியை உற்சாகப்படுத்தினார். அப்போது முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu