நெல்லையில் தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள்

நெல்லையில் தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள்
X

முதலாவது தமிழ்நாடு தென்மண்டல அளவிலான டேக்வோண்டா போட்டிகள் நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் அமைந்துள்ள உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு தென்மண்டல அளவிலான டேக்வோண்டா போட்டியில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 470 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு.

தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள். தென் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த 470 வீரர்கள் பங்கேற்பு.

முதலாவது தமிழ்நாடு தென்மண்டல அளவிலான டேக்வோண்டா போட்டிகள் நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் அமைந்துள்ள உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 470 வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோர் என 5 பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன.

லீக் முறையில் நடைபெறும் சுற்றுகளில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு நாளைய தினம் காலிறுதி, அரையிறுதி போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்கள் இறுதி சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி ஆகிய பதக்கங்களும், சான்றிதழும் கொடுக்கப்படும்.

மேலும் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்று திருநெல்வேலி டேக்வாண்டோ அசோசியேசன் மற்றும் தென் மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story