/* */

தென் மாவட்ட வளர்ச்சி, சட்டம், ஒழுங்கு நிர்வாகத்தை மையமாக கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத் கருத்து

தென்மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய மாநிலம் உருவாக்க நீண்ட நாள் கோரிக்கை தற்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தென் மாவட்ட வளர்ச்சி, சட்டம், ஒழுங்கு நிர்வாகத்தை மையமாக கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத் கருத்து
X

தென் மாவட்டத்தை மையமாகக் கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும். தமிழக வளர்ச்சிக்கும் நிர்வாக வசதிக்கும் ஏற்றவாறு தமிழகத்தை மூன்றாக பிரித்து புதிய மாநிலங்களை அமைக்க வேண்டுமென நெல்லையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி முருகானந்தம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை சந்திக்க வருகை தந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி முருகானந்தம் தாக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நிர்வாகிகளையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்கிறோம். மேலும் நெல்லையப்பர் திருக்கோவிலில் 17 ஆண்டுக்கு பின்னர் 3 வாயில்கள் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

தென் மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்கான எந்த திட்டமும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை. தென்மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில் தற்போது அது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

கொங்கு மாநிலம் அமையவேண்டும் என்ற கருத்தும் தற்போது வலிமை பெற்றுள்ளது. இது போன்ற கருத்துகள் பிரிவினை வாதம் இல்லை எனவும், சிறிய மாநிலத்தை பிரித்தால் அது நிர்வாகம் செய்ய வசதியானதாக இருக்கும். எனவே நிர்வாக வசதிக்காக தான் மாநில பிரிப்பை கேட்கிறோம்.

வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தான் மாநில பிரிவினை முன்னெடுக்கப்படுகிறது. தென்மாவட்டங்கள் வளர்ச்சி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. தென்மாவட்டங்கள் தேச விரோத சக்திகள் ஊடுருவி வளர்ச்சியை தடை செய்கின்றனர் .

உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நடந்து வருகிறது. தென் மாவட்ட வளர்ச்சி, சட்டம், ஒழுங்கு நிர்வாகத்தை மையமாக கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும்.தமிழகத்தை மூன்றாக பிரித்து 3 மாநிலங்கள் உருவாக்க வேண்டும் . மாநிலங்கள் பிரிக்கும் முயற்சியை பிரிவினை வாதம் என எதிர்கட்சிகள் சாயம் பூசுவது தவறு. இந்த கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இது குறித்து பிரதமர் மற்றும் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் எப்போதும் ஆன்மீக மற்றும் தேசிய அரசியலை ஆதரிக்க வேண்டும். பிரதமர் நினைத்தால் ஒரே நாள் இரவில் புதிய மாநிலத்தை உருவாக்க முடியும்.திமுக ஒன்றியம் என மத்திய அரசை சொன்னதற்கு பின்னர், கொங்கு நாடு கோரிக்கை பேச்சு வலு பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.

Updated On: 14 July 2021 1:14 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...