சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் 7 பேர் கைது

சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் 7 பேர் கைது
X

சீவலப்பேரி கோவில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார் .

திருநெல்வேலியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, காவல்துறையில் நடக்கும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் எல்.சி.டி டிவி தொடங்கப்பட்டுள்ளது. இரவுநேரக் கொரோனா ஊரடங்கு அமலாகி உள்ளதால் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். அதுபோன்று ஞாயிற்றுக் கிழமைகளில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு விதிமுறைகளும் தீவிரமாக பின்பற்றப்படும் .

இதுவரை மாஸ்க் அணியாத 50 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் . மேலும் சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் சில நபர்களை தேடி வருகிறோம் , கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story