/* */

சீவலப்பேரி கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

சீவலப்பேரி கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
X

திருநெல்வேலி சீவலப்பேரி கொலை விவகாரத்தில் இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி அருகே சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்பவர் கடந்த ஞாயிறு அன்று அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் நடராஜ பெருமாள் என்பவர் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்தார். அவர் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சிதம்பரத்தின் உடலை வாங்க மறுத்து 3வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இதில் இறந்த சிதம்பரம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரண உதவியாக அவரது குடும்பத்தில் ஒருவருக்கு ரூபாய் 20 லட்சம் வழங்க வேண்டும். இறந்த பூசாரி சிதம்பரத்தின் உடலை கோவில் வளாகத்தில் புதைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சாலையில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். முன்னதாக நெல்லை கோட்டாட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் அவரது உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியடைந்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போலீசார் எச்சரித்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் இறந்தவரது உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகளிலேயே திரண்டு இருப்பதினால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் சீனிவாசன் மற்றும் மகேஷ்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிரடி பிரிவு போலீசார் கையில் லத்தி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 21 April 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு