நெல்லை மாவட்ட காவல்துறை யினருக்கு சித்த மருத்துவ முகாம்

நெல்லை மாவட்ட காவல்துறை யினருக்கு  சித்த மருத்துவ முகாம்
X

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடந்த சித்த மருத்துவமுகாமில் பங்கேற்ற  காவல்துறை அதிகாரிகள்

முகாமில், மாநகர காவல் துறை அதிகாரிகள் காவலர்களுக்கு ரத்த கொதிப்பு மற்றும் ரத்த பரிசோதனைசெய்யப்பட்டது

நெல்லை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான சித்த மருத்துவ முகாமை மாநகர காவல் துணை ஆணையாளர் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் சித்த மருத்துவ முகாம் ஆயுதப்படை மைதானத்தில் நடத்தப்பட்டது. நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் டி.பி.சுரேஷ்குமார் முகாமை தொடக்கி வைத்து, சித்த மருத்துவத்தின் பலன்களையும், அடுத்து வரக்கூடிய கொரோனா வைரஸ் (மூன்றாவது அலை) தாக்கினால், அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது பற்றியும், காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நெல்லை சித்த மருத்துவ கல்லூரி, சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர்.திருத்தணி தலைமையில் மருத்துவர்கள் மற்றும் சித்த மருத்துவ குழுவினர்கள்,மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுகு ரத்த கொதிப்பு, பரிசோதனை மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.இந்த முகாமில், ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் முத்தரசு, ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture