சித்தா கல்லூரியை மேம்படுத்துவேன்- வேட்பாளர் உறுதி

சித்தா கல்லூரியை மேம்படுத்துவேன்- வேட்பாளர் உறுதி
X

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக் உறுதியளித்தார்.

தேர்தலை முன்னிட்டு பாளையங்கோட்டை எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 11, 13, 14 ஆகிய வார்டுகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பாளையங்கோட்டை பகுதியில் சுகாதார சீர்கேடுகள் மிகுந்து காணப்படுகின்றன. கடந்த காலங்களில் திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் இந்த பகுதியை முற்றிலுமாக புறக்கணித்து உள்ளனர். இந்த பகுதிகளில் இன்னும் பல்வேறு இடங்களில் கழிப்பறை வசதி, பாதாள சாக்கடை வசதி, கழிவுநீர் ஓடை வசதி,சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று கூறினார்.

பாளையங்கோட்டையில் சிறப்பு மிக்க அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆளும் கட்சியினரால் புறக்கணிக்கப்படுவதாகவும் தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டால் அதை மேம்படுத்துவதற்கான வழிவகை செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.மேலும் பாளையங்கால்வாய்யை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கழிவு நீர் கலப்பதை தடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
ai in future agriculture