இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள குறுங்காடு வளர்ப்பு திட்டம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
நெல்லையில் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
நெல்லையில் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். 11 சென்ட் பரப்பளவில் 120 வகையான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் வி.எம் சத்திரம் பகுதியில் உள்ள மூர்த்தி நயினார் குளம் அருகில் விஎம் சத்திரம் மேம்பாட்டு அமைப்பு சார்பில் இளைஞர்களால் குறுங்காடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு நெல்லை மாநகரில் பசுமையை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும் 120 வகையில் மொத்தம் 151 மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது. இந்த குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் குறுங்காட்டில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டார். மொத்தம் 11 சென்ட் பரப்பளவில் இந்த குறுங்காடு உருவாக்கப்படுகிறது. இங்கு 5 அடிக்கு ஒரு மரம் வீதம் 150 மரக் கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளுக்கு தேவையான நீர் ஆதாரத்திற்கு வி.எம்.சத்திர மேம்பாடு அமைப்பினர் ஆழ்துளை கிணறு அமைத்து உள்ளனர்.
இங்கு நாட்டு மரங்களான வேப்பமரம், புளியமரம், புங்கமரம், பூவரசன் மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. பலரது பங்களிப்புடன் மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இந்த குறுங்காடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்தனர். குறுங்காட்டினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடர்ந்து மரங்களைப் பராமரித்து பசுமை காடுகளை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டுமென்று அறிவுரை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu