நெல்லையில் எஸ்டிடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் எஸ்டிடியு தொழிற்சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்
X

நெல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தினர்.

நெல்லை மேலப்பாளையத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி எஸ்டிடியூ தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் எஸ்டிடியு தொழிற்சங்கங்கம் பங்கெடுத்துள்ளது.

பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், திருத்தப்பட்ட தொழிலாளர் நலச் சட்டத்தை வாபஸ் வாங்குவது. பொதுத்துறை பங்குகளை விற்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரம் வழங்கிடவும், ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்திட என்பன போன்ற 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிஃப் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் கல்வத் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்டோ சங்கத்தலைவர் செய்யது, மாவட்ட பொருளாளர் சுல்தான் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சித்திக், மசூது, பாதுஷா, மொன்ன முகம்மது, மசூதுஞானியார், சிந்தா, சலீம் தீன், பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் சிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட பொதுச்‌செயலாளர் பர்கிட் அலாவுதீன் மற்றும் தொழிற்சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிஃப் கண்டன உரை நிகழ்த்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேட்டை ரசூல் நன்றி கூறினர்.

ஆர்ப்பாட்ட நிகழ்வில் ஆட்டோ, கார், வேன், பீடி, தொழிலாளர்கள் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!