பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மேலப்பாளையம் சந்தை ரவுண்டான அருகில் எஸ்டிடியூ தொழிற்சங்க மாநகர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிப் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலப்பாளையத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து எஸ்டிடியூ தொழிற்சங்கத்தினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர் மாவட்டம், மேலப்பாளையம் சந்தை ரவுண்டான அருகில் எஸ்டிடியூ தொழிற்சங்க மாநகர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிப் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். தொடர் விலை உயர்வினால் சாமானிய ஏழை எளிய மக்கள் வாழ்க்கை தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விஷயத்தில் கவனம் செலுத்தி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மாவட்ட பொருளாளர் சுல்தான் பாஷா வரவேற்பு உரையாற்றினர். மாவட்ட துணைதலைவர் கல்வத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சலீம்தீன், சித்திக், முன்னிலை வகித்தனர். எஸ்டிடியூ தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப்நிஷ்தார் , எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ பாளை தொகுதி செயலாளர் சிந்தா, எஸ்டிடியூ சங்கத்தின் பீடி சங்க நிர்வாகிகள், மீன் சங்க நிர்வாகிகள், மாட்டிறைச்சி சங்க நிர்வாகிகள், உடல் உழைப்பு சங்க நிர்வாகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் நிறைவாக எஸ்டிடியு ஆட்டோ சங்க தலைவர் செய்யது மைதீன் நன்றி உரையாற்றினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!