குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி எஸ்டிடியு தொழிற்சங்கம் மனு

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி எஸ்டிடியு தொழிற்சங்கம் மனு
X

மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதிஜா பாசிலாவிடம் எஸ்டிடியு தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலப்பாளையத்தில் குண்டும் குழியுமான சாலைகளை சீர் செய்யக்கோரி எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில் மண்டல சேர்மனிடம் மனு.

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதிஜா பாசிலாவிடம் எஸ்டிடியு தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

நெல்லை மாநகர் மாவட்டம் எஸ்டிடியு தொழிற்சங்கம் சார்பாக புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதிஜா இக்லாம் பாசிலாவிடம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து எஸ்டிடியு தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், கடந்த மழையின் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. அதை போர்க்கால அடிப்படையில் சரி செய்து தருமாறு எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் திமுக பகுதி செயலாளர் துபாய் சாகுல், எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் ஆரிப் பாஷா, மாவட்ட செயலாளர் செய்யது மைதீன், மாவட்ட பொருளாளர் சுல்தான் பாதுஷா மற்றும் மீன் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாதுஷா, பீடித் தொழிலாளர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கள் மைதீன், உடலுழைப்பு தொழிலாளர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுமனை சிந்தா, 50வது வார்டு நிர்வாகி ஞானியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!