துர்நாற்றத்திலிருந்து கன்னிமார் குளம் சுத்தம்; மாநகராட்சி துணை ஆணையருக்கு பாராட்டு
![துர்நாற்றத்திலிருந்து கன்னிமார் குளம் சுத்தம்; மாநகராட்சி துணை ஆணையருக்கு பாராட்டு துர்நாற்றத்திலிருந்து கன்னிமார் குளம் சுத்தம்; மாநகராட்சி துணை ஆணையருக்கு பாராட்டு](https://www.nativenews.in/h-upload/2021/09/02/1276182-img-20210902-wa0029.webp)
நெல்லையை அடுத்த மேலப்பாளையம் தெற்கு பகுதி 29வது வார்டு ஹாமீம்புரம் பகுதியில் அமைந்துள்ள கன்னிமார் குளத்தில் கழிவுகள் தேங்கியதால் கடந்த சில நாட்களாக கடும் துர்நாற்றம் வீசியது. இதை சரி செய்ய எஸ்டிபிஐ ( SDPI ) கட்சி மற்றும் பசுமை மேலப்பாளையம் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக சுத்தம் செய்யும் பணியை செய்து வருகின்றனர். இன்று குளத்து பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளை எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணி நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எ.பாத்திமா தலைமையில் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜவுளி காதர், தொகுதி செயலாளர் பாளை சிந்தா, பாப்புலர் ஃப்ரண்ட் ஏரியா தலைவர் சேக் தாவுத் மற்றும் மகளிர் அணி கிளை நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
உடன் மகளிர் அணி நிர்வாகிகள் கிளைத் தலைவர் பஷீராள், துணைத்தலைர் மைதீன்பாத்து, செயலாளர் ஜொஹ்ராபாத்திமா, துணைச்செயலாளர் எஸ்.மாஜான்பீவி, பொருளாளர் சபர்நிஷா, கிளை செயற்குழு உறுப்பினர் பஷீராள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எஸ்.எ.பாத்திமா மாநகராட்சி அதிகாரிகளுக்கு நிரந்தரமாக துர்நாற்றம் வராமல் தடுக்கும் பொருட்டு பாதாள சாக்கடை திட்டதை முழுமையாக அமல் படுத்த வேண்டும். மேலப்பாளையம் 29 வார்டு கழிவுநீரை குழாய்கள் மூலம் பாதாள சாக்கடையில் இணைக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார்.
போர்கால அடிப்படையில் சுத்தம் செய்யும் பணிகளை முடக்கி விட்ட மாநகராட்சி துணை ஆணையர் சுகிபிரேமளாவுக்கு நன்றி தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu