மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X
மேலப்பாளையத்தில் அரசு பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. தொடங்க எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் நெல்லை முபாரக் வாக்குறுதி அளித்தார்.

அமமுக எஸ்.டி.பி.ஐ. கூட்டணியில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் முஹம்மது முபாரக் என்ற நெல்லை முபாரக் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அதிகாலை முதலே பிரச்சாரத்தை துவங்கிய அவர் மேலப்பாளையம் 35,36,37 வார்டுகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலப்பாளையம் பகுதின் சுகாதார சீர்கேடுகளை சுட்டிக் காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் அமைக்கத் தவறிய முந்தைய ஆட்சியாளர்களை குறை கூறினார். தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப் பட்டால் மேலப்பாளையம் பகுதி மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் அரசு பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

பல்வேறு இடங்களில் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பரப்புரையின் போது எஸ்.டி.பி.ஐ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!