கொரோனாவால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்

கொரோனாவால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்
X

கொரோனாவால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்

நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்

கொரோனா நோய் தொற்றால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலப்பாளையத்தை சார்ந்த 43 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் அவர்களை தொடர்பு கொண்டு நல்லடக்கம் செய்ய உதவி கோரினர்.

இதையடுத்து மேலப்பாளையம் பகுதியை சார்ந்த ஜாபர் இமாம், தமீம், எஸ்டிபிஐ கட்சி புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமையிலான தன்னார்வ மீட்புக்குழுவினர் உடலை பெற்று எஸ்டிபிஐ கட்சி ஆம்புலன்ஸ் மூலம் மேலப்பாளையம் கொண்டு சென்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, இறந்தவரின் மதசடங்குகள்படி மேலப்பாளையம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!