NPTEL கிளையில் தேசிய அளவில் ஆறாம் இடம் பிடித்தது பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி

NPTEL கிளையில் தேசிய அளவில் ஆறாம் இடம் பிடித்தது பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
X
NPTEL கிளைகளில் தேசிய அளவில் ஆறாம் இடம் பிடித்து பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சாதனை

மத்திய அரசின் கல்வியமைச்சகத்தின் சார்பில் நாடெங்கிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர் பயன்பெற, இணைய வழியில் கற்றலுக்கான என்.பி.டி.இ.எல் (NPTEL) எனும் தேசியத் தொழில் நுட்பக் கற்றல் அமைப்பு (National Programme on Technology) தொடங்கப்பட்டு இலட்சக்கணக்கான மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஸ்வயம் என்.பி.டி.இ.எல் (SWAYAM NPTEL) கிளை அமைப்பினை (Local Chapter) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தொடங்க மத்திய அரசின் கல்வி அமைச்சகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவ்வமைப்பு கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி அவர்கள் தலைமையில் 26.07.2018 அன்று தொடங்கப்பட்டது.

வகுப்பறை சார்ந்த கற்றலுக்கு இணையாக, இணையம் சார்ந்த கற்றல் எனும் முறையிலமைந்த என்.பி.டி.இ.எல் மின் பாடத்திட்டங்களை ஏழு ஐ.ஐ.டி நிறுவனங்களும் (Indian Institute of Technology) இந்திய அறிவியல் நிறுவனமும் (Indian Institute of Science) இணைந்து தயாரித்து வழங்குகின்றது.

கோவிட்-19 எனும் கொரோனா நோயால் நாடு பாதிக்கப்பட்டுப் பொது முடக்கம் அனுசரிக்கப்பட்ட காலத்திலும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி என்.பி.டி.இ.எல் கிளையானது சிறப்பாகச் செயல்பட்டு, 2020 ஆம் ஆண்டிற்கான தர மதிப்பீட்டில் அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆறாம் இடத்தைப் பிடித்தது. மேலும் சிறந்த எம்.பி.டி.இ.எல் கிளையாகத் தேர்வு செய்யப்பட்டு 'A" எனும் உயர் மதிப்பீடு (கிரேட்) மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.

84 மாணவ மாணவியருக்கு சில்வர் கிரேடும், 4 மாணவ மாணவியருக்குக் கோல்ட் கிரேடும் அளிக்கப்பட்டது. என்.பி.டி.இ.எல் இணையவழித் தேர்வுகள் எழுத மாணவர்களைச் சிறப்பாக நெறிப்படுத்தித் தேசிய அளவில் வெற்றி பெற வைத்தமைக்காக அந்தந்த துறைச்சார்ந்த 17 என்.பி.டி.இ.எல் நெறியாளர்களுக்கு (NPTEL MENTORS) சிறந்த தேசிய நெறியாளர் சான்றிதழ்கள்; மத்திய கல்வியமைச்சகத்தால் தரப்பட்டது. சிறந்த இணைய வழி ஒருங்கிணைப்பாளருக்கான விருது என்.பி.டி.இ.எல் ஒருங்கிணைப்பாளரும், சென்டர் பார் டிஜிட்டல் லேனிங் டீன் (DEAN) முனைவர்.ஷாஜூன் நிஷா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எண்ம கற்றல் மையம் (Centre for Digital Learning)

இணையவழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிப்பதற்காக பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் எண்ம கற்றல் மையம் தொடங்கப்பட்டு, அதன் கீழ் பாம்பே ஐ.ஐ.டி ஸ்போக்கன் டுடோரியல் புரோகிராம் மற்றும் தமிழக அரசின் தகவல் தொழில் நுட்ப அகாடமி நடத்தும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கலை, அறிவியல், வணிகம் மற்றும் வணிக மேலான்மை அடங்கிய 13 துறைகள் சார்பாக 5 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 1842 மாணவ மாணவியருக்கு ஐ.ஐ.டி (IIT) மும்பை சார்பில் சான்றிதழ்கள் தரப்பட்டன.

தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனமான ICTACT சார்பில் 491 மாணவ மாணவியருக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. பவர் செமினார் (POWER SEMINAR), ஸ்கில் எட்ஜ் (Skill Edge) மற்றும் செட்கெட்கோ (SETGETGO) எனும் திறன் பயிற்சிக் கருத்தரங்குகளில் 874 மாணவ மாணவியர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெற்றனர். ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகளில் 16 பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

என்.பி.டி.இ.எல் கிளைப் பொறுப்பாளராகவும், சென்டர் பார் டிஜிட்டல் லேனிங் டீன் (DEAN) ஆகவும், முதுநிலைக் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் ஷாஜூன் நிஷா அவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர். முஹம்மது ஹனீப் அவர்களும், இளநிலை வணிகவியல் துறைத்தலைவர் முனைவர். முஹம்மது அபுஷாலி ஷேக் அவர்களும், மற்றும் துறைசார்ந்த நெறியாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

என்.பி.டி.இ.எல் தேர்வில் அகில இந்திய அளவில் சாதனை படைத்த பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவ மாணவியரையும் பேராசிரியர்களையும், கல்லூரி நிர்வாகத்தினர்பாராட்டினர்.

கல்லூரி முதல்வர் டாக்டர் மு. முஹம்மது சாதிக், துணை முதல்வர் டாக்டர் செய்யது முஹம்மது காஜா, கலைப்புல முதன்மையர் டாக்டர் ச. மகாதேவன், டிஜிடல் லேர்னிங் சென்டர் (மின்வழிக் கற்றல்) புல முதன்மையர் டாக்டர் ஷாஜுன் நிஷா, ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் முஹம்மது ஹனீப், டாக்டர் அபுசாலி ஷேக் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!