நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல்

நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள்.

நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் மொத்தம் 86 ஆயிரம் பேர் இருந்து வருகின்றனர். ஓய்வுபெற்ற தொழிலாளிகளுக்கு 2015 ஆண்டு முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் அதற்கான தொகையை ரூபாய் 7850 என்பதை அமல்படுத்த வேண்டும்.

குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாதம்தோறும் ஒன்றாம் தேதி அன்று ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நெல்லை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மத்திய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் நெல்லை- தூத்துக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 15 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின் சாலை மறியலை கைவிட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!