/* */

நெல்லை உழவர் சந்தையில் மலைவாழ் மக்களின் விளைபொருட்கள் விற்பனை

மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அபூர்வ உணவு பொருட்கள் வனத்துறை உதவியுடன் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

நெல்லை உழவர் சந்தையில் மலைவாழ் மக்களின் விளைபொருட்கள் விற்பனை
X

உழவர் சந்தையில் விற்பனைக்காக பாபநாசம் மலைபபகுதியில் விளையும் பொருட்கள்.

நெல்லை மகாராஜநகர் உழவர்சந்தையில் வனத்துறை உதவியுடன் பாபநாசம் மலைபபகுதியில் விளையும் பொருட்களை மலைவாழ் (காணி இன) மக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், பாபநாசம் மலைப்பகுதியில் வசிக்கும் காணி இன மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு வழிவகை காண மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், மலைப்பகுதியில் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் மிகுந்த அபூர்வ உணவுப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்க ஏதுவாக உழவர் சந்தையில் மலைப்பகுதி விளைபொருட்களை சந்தைப்படுத்த நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு உத்தரவுபடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாபநாசம் மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் எவ்வித ரசாயன கலப்படம் இன்றி இயற்கை முறையில் பாெருட்களை விளைவித்து வருகிறார்கள். இந்த பொருட்களை நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டுவந்து விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலைப்பகுதியில் விளையும் பழவகைகள், மிளகு, நெல்லிக்காய், நார்த்தங்காய், குடம்புளி, காந்தாரி மிளகாய், மலைத் தேன் உள்ளிட்ட 20 வகையான பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதற்காக இவர்களுக்கு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மலைப்பகுதியில் போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் தற்போது வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் உழவர் சந்தையில் கடை அமைக்க திட்டமிட்டுள்ளனர். தங்களுடைய பொருட்களை விற்பதற்கு சந்தை கிடைக்காத நிலையில் தற்போது களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர் கணேசன் சந்தையை ஏற்படுத்தி கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை அசோக்குமார், வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித் துறை துணை இயக்குனர் முருகானந்தம், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் பாப்பாத்தி மஜீத், உதவி வேளாண்மை அலுவலர்கள் திருமுருகன் மற்றும் உத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 8 Aug 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...