மாணவ ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி சபாநாயகர் வழங்கல்

மாணவ ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி சபாநாயகர் வழங்கல்
X

அரசு/ அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு வழங்கி தொடங்கி வைத்தார்

பாளையங்கோட்டை பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் 110 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சபாநாயகர் வழங்கினார்.

அரசு/ அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு வழங்கி தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஸ்ரீகாந்திமதி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2021-2022 நிதியாண்டில் அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 11ஆம் வகுப்பு முடித்து 12ஆம் வகுப்பு பயிலும் 110 மாணவ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, பானையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் , திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் இன்று (02.08.2022) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கஸ்டாலின் அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ.மாணவியர்களை ஊக்கவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவ,மாணவியர்களின் எண்ணிக்கை 7662 மாணவர்களும், 9321 மாணவியர்களும் ஆக மொத்தம் 16983 மாணவ.மாணவியர்களுக்கு 2021-2022 நிதியாண்டில் அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 11ஆம் வகுப்பு முடித்து 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவியலர்களுக்கு இலவச மதிவண்டிகளை வழங்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்ரீ காந்திமதியம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 110 மாணவ.மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் இன்று வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கல்வி தரத்தை ஊக்கவிக்கும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகள் விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். அதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. மாணவ.மாணவியர்கள் பள்ளி படிப்பை முடித்த பின்பு கல்லூரியில் எந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளதுதான் நான் முதல்வன் என்ற திட்டம் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

எனவே பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்கள் அனைவரும் படிக்கும் பாடத்தை புரிந்து படித்து மேற்படிப்புக்கு செல்ல வேண்டும். பெற்றோரின் விருப்பத்தையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர், மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) எம்.சுகன்யா, உதவி தலைமை ஆசிரியர் பிரேமலதா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைடஸ் ஜான் போஸ்கோ, மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பள்ளி மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!