கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
X
பர்கிட் மாநகரில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாளையங்கோட்டை பர்கிட்மாநகரம் பர்கிட் ஸ்போட்ர்ஸ் கிளப் சார்பாக முதலாம் ஆண்டாக பைசல் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி கிங் ஆப் கிங்ஸ் விளையாட்டு மைதானத்தில்நடைபெற்றது.

இதில் 14 அணிகள் மோதிய இந்த தொடரில் பர்கிட்மாநகரம் எ அணி முதல் பரிசையும் பர்கிட் பி அணி இரண்டாம் பரிசையும் மூன்றாவது பரிசை கோட்டூர் இளைஞர் கிரிக்கெட் அணியும் வென்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி பர்கிட்மாநகரம் பள்ளிவாசலில் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை ஜமாத் நிர்வாகிகள் அப்பலோ பீர், சுபைர் முஹம்மது. எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், உமர்பாருக் , உள்ளிட்டோர் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பர்கிட் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!