சமாதானபுரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

சமாதானபுரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
X
சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் உள்ள முருகன்குறிச்சி மின்பாதையில் நாளை மின்தடை அறிவிக்கப்படடுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற விநியோக பிரிவு செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் உள்ள முருகன் குறிச்சி மின்பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நெல்லை - திருச்செந்தூர் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் பாதைகள் மாற்றி அமைக்கப்படுகிறது.

எனவே சமாதானபுரம் மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், ஆபுத்திரன் தெரு, மங்கையர்கரசி தெரு, சர்ச் தெரு, மனகாவலன் பிள்ளை ஆஸ்பத்திரி தெரு, பிச்சுவனத்தெரு, பழைய போலீஸ் மருத்துவமனை தெரு, சிவலோகநாதர் தெரு, மார்க்கெட் பகுதி தென்புறம் ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story