திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு
கோவிட் பெருந்தொற்று இரண்டாவது அலை தடுப்பு நடவடிக்கையை அரசுடன் இணைந்து செயல்படுத்துவதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்
கோவிட் பெரும் தொற்று நோயின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகவும் ஆபத்தான முறையில் பாதித்துள்ளது. தொற்று நோயினால் தினமும் பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் சூழலில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, சுகாதார துறையோடு இணைந்து மாவட்ட அளவில் நிவாரண பணிகளை முன்னெடுக்க மாவட்ட செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் முகம்மது அலி தலைமையில் நடைபெற்ற இந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொது செயளாளர் முகைதீன் அப்துல் காதர் அவர்கள் கலந்து கொண்டு தொற்று நோயை எதிர்கொள்வது சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அதாவது
1.கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்வது.
2.தொற்று நோயின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் அரசு மேற்கொண்டு வரும் அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தன்னார்வ குழு இணைந்து செயல்படுவது.
3.நோயாளிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி, படுக்கை வசதி மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதிகளை ஏற்பாடு செய்வது.
4. தொற்று நோயினால் இறந்த நபர்களை உலக சுகாதார நிறுவனம் (WHO) வழங்கியுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் முறையாக அடக்கம் / தகனம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற வழிவகைகளை தடையின்றி ஏற்படுத்துவது.
மேற்கண்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. விஷ்னு அவர்களை நேரில் சந்தித்து அரசு மேற்கொண்டு வரும் அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளிலும் பாப்புலர் ஃப்ரண்ட் இணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு இன்று நடைபெற்றது.இந்த சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட தலைவர் முகம்மது அலி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட செயலாளர் இம்ரான் அலி, மாவட்ட மக்கள் தொடர்பாளர் (PRO) M.S. சிராஜ், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) மாவட்ட பொது செயலாளர் ஹயாத் முகம்மது மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu