நெல்லையில் காவலர் பல்பொருள் அங்காடி 5 நாட்களுக்கு மூடல்

நெல்லையில் காவலர் பல்பொருள் அங்காடி 5 நாட்களுக்கு மூடல்
X
நெல்லை காவலர் பல்பொருள் அங்காடி.
நெல்லையில் சுமார் 700 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர் அங்காடி 5 நாட்கள் மூடப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நெல்லையில் சுமார் 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிக்கு வரும் நிலையில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை 5 நாட்கள் பல்பொருள் அங்காடி மூடப்படுவதாக நெல்லை மாநகர காவல் ஆணையர் துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் இன்று முதல் ஐந்து நாட்கள் பல்பொருள் அங்காடி விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய்த்தொற்று குறைந்த பிறகு பல்பொருள் அங்காடி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!