புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகளுக்கு புகைப்பட பயிற்சி வகுப்பு

புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகளுக்கு புகைப்பட பயிற்சி வகுப்பு
X

பயிற்சியை துவங்கி வைத்த மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி.

புத்தகத் திருவிழாவில் அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்வாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பயிற்சி வகுப்பின் எட்டாம் நாளான இன்று புகைப்படக் கலை பயிற்சி நடத்தப்பட்டது. மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி இப்பயிற்சியை துவங்கி வைத்தார்.

இப்பயிற்சியினை புகைப்பட கலைஞர் ரோகிணி முத்துராம் இப்பயிற்சியை நடத்தினர். இப்பயிற்சியில் பல்வேறு புகைப்பட கருவிகள் மாணவர்களிடம் காண்பிக்கப்பட்டது. அக்கருவிகளை பயன்படுத்தும் முறைப்பற்றியும் விரிவாக விளக்கப் பட்டது.

இப்பயிற்சியில் கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நாளை ஒன்பதாவது நாள் கழிவுப் பொருட்களை கொண்டு அழகிய கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்