நெல்லையில் பெய்த லேசான மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

நெல்லையில் பெய்த லேசான மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி
X

நெல்லையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் லேசான மழை பெய்தது.

நெல்லையில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் பெய்த லேசான மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி, நெல்லை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான கோடை வெயில் அடித்து வந்தது. பொதுமக்கள் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், நுங்கு, பதநீர், குளிர்பானங்கள் என அருந்தி வந்தனர். எனினும் நெல்லையில் கடந்த இரண்டு மாதங்களாக மழை இன்றி மக்கள் பகலில் வெயிலிலும் இரவில் பூழுக்கத்திலும் துவண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று நெல்லையில் வெயிலின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் மதியத்திற்கு மேல் பாளையங்கோட்டை, தியாகராஜ நகர் பகுதிகளில் திடீரென லேசான மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. வெயிலின் வெப்பம் தணிந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!